திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. லேவியராகமம் 19:15 நம்முடைய தேவன் நீதியுள்ளவர், அவர் நாம் நியாயமானவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சாலொமோன் ராஜா தனது நியாயமான தீர்ப்பைக் கூறினவர். ஒரு நாள் இரண்டு பெண்கள் அவர் முன் வந்தனர், இரண்டுபேருமே உயிருள்ள குழந்தையின் தாய் என்று வாதாடினர். சாலொமோன் ஞானத்தோடு ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. எனவே, குழந்தையை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தன்னுடையக் கோரிக்கையைக் கைவிட முன்வந்தபோது,உண்மையான தாயின் அன்பும் அக்கறையும் வெளிப்பட்டது. சாலொமோன் அவளுடைய உண்மையான இருதயத்தை அடையாளம் கண்டு, குழந்தையை அவளுக்குக் கொடுத்தார் * சாலொமோனின் பாரபட்சமற்ற தீர்ப்பு அவர் நியாயத்தில் உறுதியாய் இருந்ததை வெளிப்படுத்தியது. அது தலைவர்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.* நீதி என்பது தனிப்பட்ட சார்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும், கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மையை விரும்புகிறார் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.* ஒவ்வொரு நபரையும் அவர்களின் சமூக அந்தஸ்து அல்லது செல்வாக்கு பொருட்படுத்தாமல் நியாயமாக நடத்துவது கர்த்தரின் குணத்துடன் நம்மை ஒத்துப்போகச் செய்கிறது. * பாரபட்சமின்றி நியாயத்தைச் செய்யுங்கள்.* அப்படிச் செய்வது கர்த்தரின் கட்டளைகளுக்கு மதிப்பைக் கொடுக்கும், மேலும் மிகவும் நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்பை ஏற்படுத்தும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்ட எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நியாயத்தையும் நீதியையும் வெளிப்படுத்த எனக்குக் கிருபைத்தாரும். ஆமென்.
நீதியை சிதைத்து, ஏழைகளுக்கு பாரபட்சம் காட்டி, செல்வாக்கு...
“திங்கட்கிழமை, 28 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. லேவியராகமம் 19:15 நம்முடைய தேவன் நீதியுள்ளவர், அவர் நாம் நியாயமானவர்களாகவும், நீதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சாலொமோன் ராஜா தனது நியாயமான தீர்ப்பைக் கூறினவர். ஒரு நாள் இரண்டு பெண்கள் அவர் முன் வந்தனர், இரண்டுபேருமே உயிருள்ள குழந்தையின் தாய் என்று வாதாடினர். சாலொமோன் ஞானத்தோடு ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. எனவே, குழந்தையை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தன்னுடையக் கோரிக்கையைக் கைவிட முன்வந்தபோது,உண்மையான தாயின் அன்பும் அக்கறையும் வெளிப்பட்டது. சாலொமோன் அவளுடைய உண்மையான இருதயத்தை அடையாளம் கண்டு, குழந்தையை அவளுக்குக் கொடுத்தார் * சாலொமோனின் பாரபட்சமற்ற தீர்ப்பு அவர் நியாயத்தில் உறுதியாய் இருந்ததை வெளிப்படுத்தியது. அது தலைவர்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.* நீதி என்பது தனிப்பட்ட சார்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும், கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மையை விரும்புகிறார் என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.* ஒவ்வொரு நபரையும் அவர்களின் சமூக அந்தஸ்து அல்லது செல்வாக்கு பொருட்படுத்தாமல் நியாயமாக நடத்துவது கர்த்தரின் குணத்துடன் நம்மை ஒத்துப்போகச் செய்கிறது. * பாரபட்சமின்றி நியாயத்தைச் செய்யுங்கள்.* அப்படிச் செய்வது கர்த்தரின் கட்டளைகளுக்கு மதிப்பைக் கொடுக்கும், மேலும் மிகவும் நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்பை ஏற்படுத்தும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பாரபட்சம் காட்டாமல் நீதியை நிலைநாட்ட எனக்கு உதவிச் செய்யும். என் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நியாயத்தையும் நீதியையும் வெளிப்படுத்த எனக்குக் கிருபைத்தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

