திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருங்கள். 1 பேதுரு 3:8 * மேலே குறிப்பிட்டுள்ள வசனம் நாம் பரிவுணர்வோடும், இரக்கத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.* பச்சாதாபம் என்பது உங்களை இன்னொருவரின் காலணியில் வைத்து அவர்களின் கண்களால் உலகைப் பார்க்கும் திறன்.* சுயநலம் நிறைந்த இந்த உலகில், அனுதாபத்தையும், இரக்கத்தையும் நாம் கடைப்பிடிப்பது நமது விசுவாசத்திற்கு அழகான சான்றாகிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் நாயீன் ஊரில் பிரவேசித்தப் போது, மரித்துப் போன சடலத்தை கண்டு, காட்டிய அனுதாபமும் இரக்கமும் லூக்கா 7 இல் சொல்லப்படுகிறது. அது ஒரு விதவையின் ஒரே மகனின் இறுதி ஊர்வலம். தன் ஒரே மகனை இழந்த சோகம் மாத்திரமல்லாமல், நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடும் அவள் காணப்பட்டாள். இயேசு அவளைப் பார்த்து அவள்மேல் மனதுருகி “அழாதே” என்று சொல்லி. பாடையின் அருகே வந்து மரித்துப்போன வாலிபனை உயிரோடே எழுப்பினார். அவனுடைய வாழ்க்கையையும், தாயின் நம்பிக்கையையும் மீட்டெடுத்தார். இந்த இரக்கச் செயல், மரணத்தின் மீது கிறிஸ்துவின் வல்லமையைக் காட்டுவது மட்டுமல்லாமல், துன்பப்படும் மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் இரக்கத்தையும், துக்கத்தின் போது அவர் ஆறுதல் அளிக்கக்கூடியவராய் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. * விதவையின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இயேசு வந்து உதவியது போல், நீங்களும் துன்பப்படுகிறவர்களுடன் சேர்ந்து நின்று, உங்கள் இரக்கச் செயல்களின் மூலம் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு காண்பிக்கலாம்.* நீங்கள் இதைச் செய்யும்போது, இயேசுவின் இருதயத்துடன் உங்களை இணைத்துக்கொள்கிறீர்கள், மேலும் இந்த உலகிற்கு அவருடைய அன்பின் பாத்திரங்களாக மாறுகிறீர்கள் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வேதனையிலும் துன்பத்திலும் உள்ளவர்களிடம் நான் அன்புக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர...
“1 பேதுரு 3:8 * மேலே குறிப்பிட்டுள்ள வசனம் நாம் பரிவுணர்வோடும், இரக்கத்தோடும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது.* பச்சாதாபம் என்பது உங்களை இன்னொருவரின் காலணியில் வைத்து அவர்களின் கண்களால் உலகைப் பார்க்கும் திறன்.* சுயநலம் நிறைந்த இந்த உலகில், அனுதாபத்தையும், இரக்கத்தையும் நாம் கடைப்பிடிப்பது நமது விசுவாசத்திற்கு அழகான சான்றாகிறது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் நாயீன் ஊரில் பிரவேசித்தப் போது, மரித்துப் போன சடலத்தை கண்டு, காட்டிய அனுதாபமும் இரக்கமும் லூக்கா 7 இல் சொல்லப்படுகிறது. அது ஒரு விதவையின் ஒரே மகனின் இறுதி ஊர்வலம். தன் ஒரே மகனை இழந்த சோகம் மாத்திரமல்லாமல், நிச்சயமற்ற எதிர்காலத்தைப் பற்றிய பயத்தோடும் அவள் காணப்பட்டாள். இயேசு அவளைப் பார்த்து அவள்மேல் மனதுருகி "அழாதே" என்று சொல்லி. பாடையின் அருகே வந்து மரித்துப்போன வாலிபனை உயிரோடே எழுப்பினார். அவனுடைய வாழ்க்கையையும், தாயின் நம்பிக்கையையும் மீட்டெடுத்தார். இந்த இரக்கச் செயல், மரணத்தின் மீது கிறிஸ்துவின் வல்லமையைக் காட்டுவது மட்டுமல்லாமல், துன்பப்படும் மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் இரக்கத்தையும், துக்கத்தின் போது அவர் ஆறுதல் அளிக்கக்கூடியவராய் இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. * விதவையின் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இயேசு வந்து உதவியது போல், நீங்களும் துன்பப்படுகிறவர்களுடன் சேர்ந்து நின்று, உங்கள் இரக்கச் செயல்களின் மூலம் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு காண்பிக்கலாம்.* நீங்கள் இதைச் செய்யும்போது, இயேசுவின் இருதயத்துடன் உங்களை இணைத்துக்கொள்கிறீர்கள், மேலும் இந்த உலகிற்கு அவருடைய அன்பின் பாத்திரங்களாக மாறுகிறீர்கள் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வேதனையிலும் துன்பத்திலும் உள்ளவர்களிடம் நான் அன்புக் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

