← செய்திகளுக்குத் திரும்பு
நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்.

“2 கொரிந்தியர் 6:16 * கர்த்தர் தமது மக்களோடுள்ள தனித்துவமான உறவு இங்கு வலியுறுத்தப்படுகிறது.* இது கர்த்தரின் அன்பு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட உடன்படிக்கை உறவு.* நீங்கள் கர்த்தரை விட்டு விலகி காணப்படுவதாக உணர்கிறீர்களோ?* தவறுகள் காரணமாக அவருடைய பிரசன்னத்தை அனுபவிப்பது உங்களுக்கு சவாலாக இருக்கிறதோ?*இயேசுவின் அன்பான கரங்களுக்குள் மீண்டும் வாருங்கள். எரேமியா புத்தகத்தின் 32 வது அத்தியாயத்தில், யூதாவின் ராஜா சிதேக்கியா, கர்த்தர் நாட்டைத் தண்டிப்பார் என்று எரேமியா கூறியதற்காக சிறையில் அடைப்பதைக் காண்கிறோம். பாபிலோனியப் படைவீரர்களால் இஸ்ரவேல் தேசம் முற்றுகையிடப்பட்டிருந்தாலும், கர்த்தர் எரேமியாவை நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பின் அடையாளமாக அவரது சொந்த ஊரான ஆனதோத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி கட்டளையிட்டார். இதைச் செய்ததன் மூலம், கர்த்தர் தாம் நம்பகமானவர் என்பதைக் காட்டி, அவருடைய மக்கள் ஒரு நாள் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்ற மன சமாதானத்தை எரேமியாவுக்குக் கொடுக்கிறார். * நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம்.* இருப்பினும், நீங்கள் தொடர்ந்து நீதியான வாழ்க்கையை வாழ்ந்து, கர்த்தரை நம்பினால், கர்த்தரின் வல்லமை மற்றும் அவருடையத் தயவின் கரம் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கும்.* அவருடனான உங்கள் முறிந்த உறவை அவர் மீண்டும் கட்டியெழுப்புவார், மேலும் உங்களை அவருடன் நெருக்கமாக்குவார்.* நீங்களும் உங்கள் தலைமுறையும் கர்த்தரின் சந்ததியாக அங்கீகரிக்கப்படுவீர்கள்.* அவரில் மகிழ்ந்து களிகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை உமது அன்பின் அரவணைப்பில் கொண்டு வந்து, உமது நெருங்கிய அன்பை அனுபவிக்க என்க்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள். 2 கொரிந்தியர் 6:16 * கர்த்தர் தமது மக்களோடுள்ள தனித்துவமான உறவு இங்கு வலியுறுத்தப்படுகிறது.* இது கர்த்தரின் அன்பு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட உடன்படிக்கை உறவு.* நீங்கள் கர்த்தரை விட்டு விலகி காணப்படுவதாக உணர்கிறீர்களோ?* தவறுகள் காரணமாக அவருடைய பிரசன்னத்தை அனுபவிப்பது உங்களுக்கு சவாலாக இருக்கிறதோ?இயேசுவின் அன்பான கரங்களுக்குள் மீண்டும் வாருங்கள். எரேமியா புத்தகத்தின் 32 வது அத்தியாயத்தில், யூதாவின் ராஜா சிதேக்கியா, கர்த்தர் நாட்டைத் தண்டிப்பார் என்று எரேமியா கூறியதற்காக சிறையில் அடைப்பதைக் காண்கிறோம். பாபிலோனியப் படைவீரர்களால் இஸ்ரவேல் தேசம் முற்றுகையிடப்பட்டிருந்தாலும், கர்த்தர் எரேமியாவை நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பின் அடையாளமாக அவரது சொந்த ஊரான ஆனதோத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி கட்டளையிட்டார். இதைச் செய்ததன் மூலம், கர்த்தர் தாம் நம்பகமானவர் என்பதைக் காட்டி, அவருடைய மக்கள் ஒரு நாள் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்ற மன சமாதானத்தை எரேமியாவுக்குக் கொடுக்கிறார். * நீங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தொடர்ந்து நீதியான வாழ்க்கையை வாழ்ந்து, கர்த்தரை நம்பினால், கர்த்தரின் வல்லமை மற்றும் அவருடையத் தயவின் கரம் உங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கும்.* அவருடனான உங்கள் முறிந்த உறவை அவர் மீண்டும் கட்டியெழுப்புவார், மேலும் உங்களை அவருடன் நெருக்கமாக்குவார்.* நீங்களும் உங்கள் தலைமுறையும் கர்த்தரின் சந்ததியாக அங்கீகரிக்கப்படுவீர்கள்.* அவரில் மகிழ்ந்து களிகூருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை உமது அன்பின் அரவணைப்பில் கொண்டு வந்து, உமது நெருங்கிய அன்பை அனுபவிக்க என்க்கு கிருபைத் தாரும். ஆமென்.