← செய்திகளுக்குத் திரும்பு
என் சகோதர சகோதரிகளே, நம்முடைய மகிமையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் பாரபட்சத்தைக் காட்டக்கூடாது.
படத்தைப் பதிவிறக்கு

என் சகோதர சகோதரிகளே, நம்முடைய மகிமையான கர்த்தராகிய இயேசு...

“ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. யாக்கோபு 2:1 இன்றைய உலகில் பாரபட்சம் ஆழமாக வேரூன்றிய சமூகத் தீமையாக மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, தேவாலயங்கள் மற்றும் விசுவாசிகளிடையே கூட இது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் நம் சுயநலம்தான். நம் தேவன் நீதியும் நேர்மையுமானவர். நாம் எதைச் செய்தாலும் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். வாழ்க்கையில் பல சமயங்களில், தெரிந்தோ தெரியாமலோ, ஏழைகள், படிக்காதவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களை கவனிக்காமல், பணக்காரர்கள், படித்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முனைகிறோம். இப்பொழுதும் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, நீங்கள் பாரபட்சமானவரா அல்லது பக்கச்சார்பற்றவரா என்பதைத் தீர்மானிக்க நேரம் ஒதுக்குங்கள். சாதி, இனம், மொழி, மதம் மற்றும் பிற எதாவது காரணங்களின் அடிப்படையில் நீங்கள் முன்னுரிமை காட்டுகிறீர்களா? வேதாகமத்தில் நீதியாய், பட்சபாதமில்லாமல் சொன்ன தீர்ப்புக்கு சாலோமன் ராஜா ஒரு அற்புதமான உதாரணம். பச்சிளம் குழந்தையின் சட்டப்பூர்வ தாய் தானே என்று உரிமை கோரி வந்த இரண்டு பெண்கள் அவரிடம் வந்தபோது, சாலோமன் ராஜா அந்தக் குழந்தையின் உண்மையான தாயைத் தீர்மானிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து பாரபட்சமற்ற தீர்ப்பை வழங்கினார். ஆகவே , இன்றும் உலகின் தலைசிறந்த அரசர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். # கர்த்தர் அனைவரையும் நேசிக்கிறார். அவர் சமூக அநீதியை எதிர்க்கிறார்.# மற்றவர்களை நியாயமாகவும் பாரபட்சமில்லாமல் நடத்துபவர்களாக இருங்கள்.# பாரபட்சமற்றவராக இருங்கள் மற்றும் சமூக நிலை அல்லது செல்வத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கர்த்தரின் அன்பை வெளிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எண்ணங்களிலும் அணுகுமுறைகளிலும் பாரபட்சமின்றி இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. யாக்கோபு 2:1 இன்றைய உலகில் பாரபட்சம் ஆழமாக வேரூன்றிய சமூகத் தீமையாக மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, தேவாலயங்கள் மற்றும் விசுவாசிகளிடையே கூட இது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் நம் சுயநலம்தான். நம் தேவன் நீதியும் நேர்மையுமானவர். நாம் எதைச் செய்தாலும் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். வாழ்க்கையில் பல சமயங்களில், தெரிந்தோ தெரியாமலோ, ஏழைகள், படிக்காதவர்கள் மற்றும் தேவைப்படுபவர்களை கவனிக்காமல், பணக்காரர்கள், படித்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முனைகிறோம். இப்பொழுதும் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, நீங்கள் பாரபட்சமானவரா அல்லது பக்கச்சார்பற்றவரா என்பதைத் தீர்மானிக்க நேரம் ஒதுக்குங்கள். சாதி, இனம், மொழி, மதம் மற்றும் பிற எதாவது காரணங்களின் அடிப்படையில் நீங்கள் முன்னுரிமை காட்டுகிறீர்களா? வேதாகமத்தில் நீதியாய், பட்சபாதமில்லாமல் சொன்ன தீர்ப்புக்கு சாலோமன் ராஜா ஒரு அற்புதமான உதாரணம். பச்சிளம் குழந்தையின் சட்டப்பூர்வ தாய் தானே என்று உரிமை கோரி வந்த இரண்டு பெண்கள் அவரிடம் வந்தபோது, சாலோமன் ராஜா அந்தக் குழந்தையின் உண்மையான தாயைத் தீர்மானிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து பாரபட்சமற்ற தீர்ப்பை வழங்கினார். ஆகவே , இன்றும் உலகின் தலைசிறந்த அரசர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். # கர்த்தர் அனைவரையும் நேசிக்கிறார். அவர் சமூக அநீதியை எதிர்க்கிறார்.# மற்றவர்களை நியாயமாகவும் பாரபட்சமில்லாமல் நடத்துபவர்களாக இருங்கள்.# பாரபட்சமற்றவராக இருங்கள் மற்றும் சமூக நிலை அல்லது செல்வத்தை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கர்த்தரின் அன்பை வெளிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் எண்ணங்களிலும் அணுகுமுறைகளிலும் பாரபட்சமின்றி இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.