சனிக்கிழமை, 28 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. நீதிமொழிகள் 19:5 கர்த்தரே உண்மையானவர். ஆனால் சாத்தானோ பொய்களின் பிதா. ஆண்டவருடையப் பிள்ளைகளின் ஒரு தனித்துவமான குணம் உண்மையாக இருப்பது. தேவன் பொய்களை வெறுக்கிறார். உண்மையாக இருப்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். நீங்கள் உண்மையுள்ள நபரா? இந்த உலக வாழ்க்கை உண்மையாக இருப்பவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கிறது. தவறான செயல்கள், சுயநல ஆதாயங்களுக்காக எதிர்மறையான மாற்றங்கள் மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கக்கேடான நடத்தைகள் எல்லா இடங்களிலும் மிகவும் பொதுவானதாகி வருகிறது. மக்கள் பொய்களில் பிழைத்து வளர்கிறார்கள். ராணி யேசபேலின் தீமையான திட்டத்தின்மூலம், பட்டணத்தின் மூப்பர்களின் உதவியோடு கல்லெறிந்து கொல்லப்பட்ட நாபோத் என்ற நபரைப் பற்றி வேதாகமத்தில் படிக்கிறோம். அவள் நாபோத்துக்கு எதிராக பொய் சாட்சிகளை ஏற்பாடு செய்து திட்டப்படி அவனைக் கொலைச் செய்தாள். ஆனால், இதைக் கவனித்தக் கர்த்தர், அவளைத் தீமைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டித்தார். எனவே, விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். # ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் செயல்களையும் கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.# அவரவர் செயலுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் வெகுமதி அளிப்பார். எல்லா தீமைகளும் சரியான நேரத்தில் நியாயந்தீர்க்கப்படும்.# பொய் சாட்சியிலிருந்து விலகி இருங்கள்.# உண்மைக்காக உறுதியாக நில்லுங்கள்.# அப்போது நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சத்தியத்திற்காக தைரியமாக நிற்க எனக்கு உதவிச் செய்யும், மேலும் என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் உண்மையுள்ள நபராக இருக்க கிருபைத் தாரும். ஆமென்
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப்...
“நீதிமொழிகள் 19:5 கர்த்தரே உண்மையானவர். ஆனால் சாத்தானோ பொய்களின் பிதா. ஆண்டவருடையப் பிள்ளைகளின் ஒரு தனித்துவமான குணம் உண்மையாக இருப்பது. தேவன் பொய்களை வெறுக்கிறார். உண்மையாக இருப்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். நீங்கள் உண்மையுள்ள நபரா? இந்த உலக வாழ்க்கை உண்மையாக இருப்பவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கிறது. தவறான செயல்கள், சுயநல ஆதாயங்களுக்காக எதிர்மறையான மாற்றங்கள் மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கக்கேடான நடத்தைகள் எல்லா இடங்களிலும் மிகவும் பொதுவானதாகி வருகிறது. மக்கள் பொய்களில் பிழைத்து வளர்கிறார்கள். ராணி யேசபேலின் தீமையான திட்டத்தின்மூலம், பட்டணத்தின் மூப்பர்களின் உதவியோடு கல்லெறிந்து கொல்லப்பட்ட நாபோத் என்ற நபரைப் பற்றி வேதாகமத்தில் படிக்கிறோம். அவள் நாபோத்துக்கு எதிராக பொய் சாட்சிகளை ஏற்பாடு செய்து திட்டப்படி அவனைக் கொலைச் செய்தாள். ஆனால், இதைக் கவனித்தக் கர்த்தர், அவளைத் தீமைக்குப் பொறுப்பேற்கச் செய்து தண்டித்தார். எனவே, விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். # ஒவ்வொரு நபரின் எண்ணங்களையும் செயல்களையும் கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.# அவரவர் செயலுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் வெகுமதி அளிப்பார். எல்லா தீமைகளும் சரியான நேரத்தில் நியாயந்தீர்க்கப்படும்.# பொய் சாட்சியிலிருந்து விலகி இருங்கள்.# உண்மைக்காக உறுதியாக நில்லுங்கள்.# அப்போது நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சத்தியத்திற்காக தைரியமாக நிற்க எனக்கு உதவிச் செய்யும், மேலும் என் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் நான் உண்மையுள்ள நபராக இருக்க கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

