ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.ரோமர் 8:18 வாழ்க்கையில், ஏற்படும் சோதனைகளினாலும், பாடுகளினாலும் மீண்டும் மீண்டும் தோல்விகளை சந்திக்கிறீர்களா? மற்றவர்களுக்கு நல்லவராய் இருந்தாலும் நீங்கள் ஒடுக்கப்பட்டதாக உணருகிறீர்களா? “தேவபக்திக்குரிய உபதேசங்களைப் பின்பற்றுவதில் உண்மையுள்ள கிறிஸ்தவனா(ளா)ய் இருப்பதில் என்ன பயன்?” என்று நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? மனம் தளர்ந்துவிடாதீர்கள். தீய எண்ணம் கொண்டவர்கள் இந்த உலகில் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால் இது யாருக்கும் நிரந்தரமான இடமல்ல. இவ்வுலகில் நாம் காணும் யாவும் கடந்துபோகும். தம்முடைய மகிமையால் நிரப்பப்பட்டப் புதியதோர் உலகத்தைத் தேவன் வாக்களித்துள்ளார். அது நமது நித்திய வாசஸ்தலமாய் இருக்கும். மீட்கப்பட்ட தம்முடையவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளத் இயேசு கிறிஸ்து திரும்பி வரும் போது இந்த மகிமை வெளிப்படும். அதுவரைக்கும் சத்தியத்தினிமித்தம் துன்பப்பட வேண்டியிருந்தாலும, தவறுக்கு ஒருபொழுதும் துணை போய் விடாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடமிருந்து மகிமையான வெகுமதியைப் பெறுவதற்கு, இறுதிவரை சத்தியத்தில் உறுதியாய் நிற்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
உங்கள் தற்காலப் பாடுகள் மறைந்துபோகும்.
“ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.ரோமர் 8:18 வாழ்க்கையில், ஏற்படும் சோதனைகளினாலும், பாடுகளினாலும் மீண்டும் மீண்டும் தோல்விகளை சந்திக்கிறீர்களா? மற்றவர்களுக்கு நல்லவராய் இருந்தாலும் நீங்கள் ஒடுக்கப்பட்டதாக உணருகிறீர்களா? "தேவபக்திக்குரிய உபதேசங்களைப் பின்பற்றுவதில் உண்மையுள்ள கிறிஸ்தவனா(ளா)ய் இருப்பதில் என்ன பயன்?" என்று நீங்கள் வேதனைப்படுகிறீர்களா? மனம் தளர்ந்துவிடாதீர்கள். தீய எண்ணம் கொண்டவர்கள் இந்த உலகில் ஆதிக்கம் செலுத்தலாம், ஆனால் இது யாருக்கும் நிரந்தரமான இடமல்ல. இவ்வுலகில் நாம் காணும் யாவும் கடந்துபோகும். தம்முடைய மகிமையால் நிரப்பப்பட்டப் புதியதோர் உலகத்தைத் தேவன் வாக்களித்துள்ளார். அது நமது நித்திய வாசஸ்தலமாய் இருக்கும். மீட்கப்பட்ட தம்முடையவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளத் இயேசு கிறிஸ்து திரும்பி வரும் போது இந்த மகிமை வெளிப்படும். அதுவரைக்கும் சத்தியத்தினிமித்தம் துன்பப்பட வேண்டியிருந்தாலும, தவறுக்கு ஒருபொழுதும் துணை போய் விடாதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடமிருந்து மகிமையான வெகுமதியைப் பெறுவதற்கு, இறுதிவரை சத்தியத்தில் உறுதியாய் நிற்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

