← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தரே இராஜா, அவர் தேசங்களை ஆளுகிறார்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தரே இராஜா, அவர் தேசங்களை ஆளுகிறார்

“வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஏனெனில் கர்த்தரே அரசர். அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். (TERV) சங்கீதம் 22:28 யூதர்கள், இயேசு ஒரு ராஜாவாய் வந்து தங்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பின் காரணமாய், ஓர் எளிய மனிதனாய் வந்த அவரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறையும் அளவிற்குச் சென்றனர். சிலுவையில் இயேசுவின் மரணம், தோல்வி அல்லது பின்னடைவு போல் தோன்றலாம். ஆனால், உண்மையில், அவர் மரணத்தையும் பாவத்தையும் வென்றார். அவர் பிசாசின் அடிமைத்தனத்தை வென்று முழு உலகமும் உண்மையான விடுதலையை அனுபவிக்க வழி திறந்தார். இப்பொழுது, ​​உலகம் முழுவதும் அவருடைய வருகைக்காக தயாராகி வருகிறது. ஆம்! அவர் இராஜாதி இராஜாவாய் மீண்டும் வந்து, சாத்தானையும் அவனது சேனைகளையும் தோற்கடித்து, பூமியில் அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பார். கிறிஸ்து மீண்டும் வரும்பொழுது அவருடன் ஆளுகை செய்ய நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் தேசங்களை ஆளும் இராஜாதி இராஜா என்று நான் நம்புகிறேன். உம்மைச் சந்திக்கவும், உம்முடன் அரசாளவும் ஆயத்தமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஏனெனில் கர்த்தரே அரசர். அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். (TERV) சங்கீதம் 22:28 யூதர்கள், இயேசு ஒரு ராஜாவாய் வந்து தங்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பின் காரணமாய், ஓர் எளிய மனிதனாய் வந்த அவரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறையும் அளவிற்குச் சென்றனர். சிலுவையில் இயேசுவின் மரணம், தோல்வி அல்லது பின்னடைவு போல் தோன்றலாம். ஆனால், உண்மையில், அவர் மரணத்தையும் பாவத்தையும் வென்றார். அவர் பிசாசின் அடிமைத்தனத்தை வென்று முழு உலகமும் உண்மையான விடுதலையை அனுபவிக்க வழி திறந்தார். இப்பொழுது, ​​உலகம் முழுவதும் அவருடைய வருகைக்காக தயாராகி வருகிறது. ஆம்! அவர் இராஜாதி இராஜாவாய் மீண்டும் வந்து, சாத்தானையும் அவனது சேனைகளையும் தோற்கடித்து, பூமியில் அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பார். கிறிஸ்து மீண்டும் வரும்பொழுது அவருடன் ஆளுகை செய்ய நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் தேசங்களை ஆளும் இராஜாதி இராஜா என்று நான் நம்புகிறேன். உம்மைச் சந்திக்கவும், உம்முடன் அரசாளவும் ஆயத்தமாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.