← செய்திகளுக்குத் திரும்பு
பரலோகப் பரிசை நோக்கித் தொடருங்கள்
படத்தைப் பதிவிறக்கு

பரலோகப் பரிசை நோக்கித் தொடருங்கள்

“ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.பிலிப்பியர் 3:14 பரலோகப் பரிசுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நம்மை அழைக்கிறார். பந்தயத்தை வெற்றிகரமாய் முடிக்கும்போதுதான் இது சாத்தியமாகும். நம்முடைய வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயமும், அது கடினமான ஒன்றுமாய் இருக்கிறது. நமது ஜென்ம சுபாவமும், நாம் வாழும் உலகமும், பிசாசும், வெற்றிக் கோட்டை அடைய விடாமல் நமக்கு எதிராய்ச் செயல்படுகின்றன. இதே போன்ற பிரச்சினைகளைப் பவுல் எதிர்கொண்டார். ஆனால் அதற்கு ஒரு தீர்வும் இருந்தது. அவர் சந்தித்த ஒவ்வொரு தோல்வியிலும் அவர் சிக்கித் தவிக்கவில்லை, மனச்சோர்வினிமித்தம் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. மாறாக, அவர் பரலோகப் பரிசைப் பின்தொடர்ந்தார். நாமும் நமது கடந்த காலத்தை மறந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் குற்ற உணர்வின் காரணமாய் நிறுத்திவிடவோ அல்லது நின்றுவிடவோ வேண்டாம். உங்கள் சூழ்நிலை அல்லது தோல்வி எதுவாயிருந்தாலும், இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை நேசித்துப் பந்தயத்தை முடிக்க உங்களுக்கு உதவ விரும்புகிறார். கடந்த காலத் தோல்விகளைப் பார்த்துவிட்டு, உங்கள் எதிர்காலத்தில் கவனத்தை இழக்காதீர்கள். தொடருங்கள். உங்களுக்காய் ஓர் பரிசு காத்திருக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக வைத்துள்ள பரலோக பரிசை நோக்கிச் செல்ல எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.பிலிப்பியர் 3:14 பரலோகப் பரிசுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நம்மை அழைக்கிறார். பந்தயத்தை வெற்றிகரமாய் முடிக்கும்போதுதான் இது சாத்தியமாகும். நம்முடைய வாழ்க்கை ஒரு ஓட்டப்பந்தயமும், அது கடினமான ஒன்றுமாய் இருக்கிறது. நமது ஜென்ம சுபாவமும், நாம் வாழும் உலகமும், பிசாசும், வெற்றிக் கோட்டை அடைய விடாமல் நமக்கு எதிராய்ச் செயல்படுகின்றன. இதே போன்ற பிரச்சினைகளைப் பவுல் எதிர்கொண்டார். ஆனால் அதற்கு ஒரு தீர்வும் இருந்தது. அவர் சந்தித்த ஒவ்வொரு தோல்வியிலும் அவர் சிக்கித் தவிக்கவில்லை, மனச்சோர்வினிமித்தம் ஓடுவதை நிறுத்தவும் இல்லை. மாறாக, அவர் பரலோகப் பரிசைப் பின்தொடர்ந்தார். நாமும் நமது கடந்த காலத்தை மறந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உங்கள் குற்ற உணர்வின் காரணமாய் நிறுத்திவிடவோ அல்லது நின்றுவிடவோ வேண்டாம். உங்கள் சூழ்நிலை அல்லது தோல்வி எதுவாயிருந்தாலும், இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை நேசித்துப் பந்தயத்தை முடிக்க உங்களுக்கு உதவ விரும்புகிறார். கடந்த காலத் தோல்விகளைப் பார்த்துவிட்டு, உங்கள் எதிர்காலத்தில் கவனத்தை இழக்காதீர்கள். தொடருங்கள். உங்களுக்காய் ஓர் பரிசு காத்திருக்கிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்காக வைத்துள்ள பரலோக பரிசை நோக்கிச் செல்ல எனக்கு உதவி செய்யும். ஆமென்.