புதன்கிழமை, 1 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 கர்த்தர் உண்மையுள்ளவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. கர்த்தர் மீதும், அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதும் இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் இன்றியமையாத அங்கமாகும். “விசுவாசமில்லாமல், தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம” என்கிறது பரிசுத்த வேதாகமம். கிறிஸ்தவ நடைமுறையில், சூழ்நிலைகள், சில சமயங்களில் கர்த்தரின் வாக்குத்தத்தங்களுக்கும், நாம் விசுவாசிப்பதற்கும் முரணாகத் தோன்றலாம். சிருஷ்டிகராகிய அவருடைய வழிகள் நம்முடையதை வழிகளைவிட மிக உயர்ந்தவை மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கடினமானவை. கர்த்தரை நம்புவது என்பது மனத்தாழ்மையையும், கர்த்தரின் திட்டங்கள் மற்றும் திறமைகளுக்கு முழுவதுமாய்க் கீழ்ப்படிவதுமாகும். மாறாக, பெருமையுள்ள இருதயம் ஆணவமாகவும், நம்பாமலும், கர்த்தரின் திறமைகளை விட தம் சொந்த திறன்களை நம்பிக் கொண்டிருக்கும். சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ என்ற மூன்று இஸ்ரவேலர்களின் கதை அசைக்க முடியாத நம்பிக்கை என்ன என்பதைப் பற்றி பேசுகிறது. அக்கினிச் சூளையில் எறியப்படும் நேரத்திலும், அவர்கள் மரணத்திற்கு அஞ்சாமல் தைரியமாக இருந்தனர். கர்த்தர் அவர்களை எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவுடையக் கைக்கும் நீங்கலாக்கி விடுவிக்காமற்போனாலும், தாங்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருப்போம் என்று அவர்கள் வெளிப்படையாக அறிக்கையிட்டனர். கர்த்தர் அவர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தை அங்கிகரித்தார். மேலும் கர்த்தருடைய தூதன் அக்கினியின் நடுவிலே உலாவி அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தார் என்பதை நாம் வாசிக்கிறோம். # நீங்கள் கர்த்தரையும், அவருடைய நேரத்தையும், வாக்குத்தத்தங்களையும் மற்றும் அவருடைய திறமைகளையும் நம்புகிறீர்களா?# உங்கள் திறமைகளை நீங்கள் எந்த அளவில் நம்புகிறீர்கள், உங்கள் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்ற கர்த்தரை நம்புவது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அசைக்கமுடியாத விசுவாசம் கொண்ட நபராக இருக்கும்படி என்னைப் பலப்படுத்தும். ஆமென்.
நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல்...
“எபிரெயர் 10:23 கர்த்தர் உண்மையுள்ளவர், அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. கர்த்தர் மீதும், அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதும் இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் இன்றியமையாத அங்கமாகும். "விசுவாசமில்லாமல், தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம" என்கிறது பரிசுத்த வேதாகமம். கிறிஸ்தவ நடைமுறையில், சூழ்நிலைகள், சில சமயங்களில் கர்த்தரின் வாக்குத்தத்தங்களுக்கும், நாம் விசுவாசிப்பதற்கும் முரணாகத் தோன்றலாம். சிருஷ்டிகராகிய அவருடைய வழிகள் நம்முடையதை வழிகளைவிட மிக உயர்ந்தவை மற்றும் புரிந்துகொள்ள மிகவும் கடினமானவை. கர்த்தரை நம்புவது என்பது மனத்தாழ்மையையும், கர்த்தரின் திட்டங்கள் மற்றும் திறமைகளுக்கு முழுவதுமாய்க் கீழ்ப்படிவதுமாகும். மாறாக, பெருமையுள்ள இருதயம் ஆணவமாகவும், நம்பாமலும், கர்த்தரின் திறமைகளை விட தம் சொந்த திறன்களை நம்பிக் கொண்டிருக்கும். சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ என்ற மூன்று இஸ்ரவேலர்களின் கதை அசைக்க முடியாத நம்பிக்கை என்ன என்பதைப் பற்றி பேசுகிறது. அக்கினிச் சூளையில் எறியப்படும் நேரத்திலும், அவர்கள் மரணத்திற்கு அஞ்சாமல் தைரியமாக இருந்தனர். கர்த்தர் அவர்களை எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவுடையக் கைக்கும் நீங்கலாக்கி விடுவிக்காமற்போனாலும், தாங்கள் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருப்போம் என்று அவர்கள் வெளிப்படையாக அறிக்கையிட்டனர். கர்த்தர் அவர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தை அங்கிகரித்தார். மேலும் கர்த்தருடைய தூதன் அக்கினியின் நடுவிலே உலாவி அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தார் என்பதை நாம் வாசிக்கிறோம். # நீங்கள் கர்த்தரையும், அவருடைய நேரத்தையும், வாக்குத்தத்தங்களையும் மற்றும் அவருடைய திறமைகளையும் நம்புகிறீர்களா?# உங்கள் திறமைகளை நீங்கள் எந்த அளவில் நம்புகிறீர்கள், உங்கள் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்ற கர்த்தரை நம்புவது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அசைக்கமுடியாத விசுவாசம் கொண்ட நபராக இருக்கும்படி என்னைப் பலப்படுத்தும். ஆமென்”
Word of Hope

