← Back to Devotionals

ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவது எப்படி என்பதைத் தொடர்ந்து...

“ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்க வேண்டும். எபிரெயர் 10:24 (TERV) சவால்களுக்கு மத்தியில் மனரீதியாக ஆரோக்கியமாயிருப்பதற்கு உந்தித் தள்ளுவதற்கான சிறந்த வழி நம்மை நாமே ஊக்கப்படுத்துவது எனக் கருதப்பட்டாலும், எல்லா நேரத்திலும் அது சாத்தியப்படுவதில்லை. ஆனால், எல்லோருமே எதிர்பார்ப்பது மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடமிருந்து வரும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் அல்லது செயல்களே. # பிறர் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது போல், நாம் மற்றவர்களை எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.# தேவன் நம்மை மிகவும் நேசித்து, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் எப்போதும் நம்முடன் இருக்கும்படி தமது பரிசுத்த ஆவியை அனுப்பினார்.# அவரே சாலச் சிறந்த தேற்றரவாளன் (ஊக்கமளிப்பவர்). # தேவ பிள்ளையாகிய உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பதால், மற்றவர்களை நீங்கள் எவ்வளவாய் ஊக்குவிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.# ஒருவரையொருவர் நேசிக்கவும், நற்கிரியைகளைச் செய்யவும் மற்றவர்களைத் தூண்டுவதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளைப் பாருங்கள்.# இதைச் செய்வதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் சிறப்பாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்கள் எனக்கு ஊக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட, என்னால் முடிந்தவரை மிகச் சிறப்பாய் மற்றவர்களை ஊக்குவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

Word of Hope

Today's Reflection

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்க வேண்டும். எபிரெயர் 10:24 (TERV) சவால்களுக்கு மத்தியில் மனரீதியாக ஆரோக்கியமாயிருப்பதற்கு உந்தித் தள்ளுவதற்கான சிறந்த வழி நம்மை நாமே ஊக்கப்படுத்துவது எனக் கருதப்பட்டாலும், எல்லா நேரத்திலும் அது சாத்தியப்படுவதில்லை. ஆனால், எல்லோருமே எதிர்பார்ப்பது மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக அவர்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடமிருந்து வரும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் அல்லது செயல்களே. # பிறர் நம்மை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது போல், நாம் மற்றவர்களை எந்த அளவுக்கு ஊக்கப்படுத்துகிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.# தேவன் நம்மை மிகவும் நேசித்து, வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் எப்போதும் நம்முடன் இருக்கும்படி தமது பரிசுத்த ஆவியை அனுப்பினார்.# அவரே சாலச் சிறந்த தேற்றரவாளன் (ஊக்கமளிப்பவர்). # தேவ பிள்ளையாகிய உங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருப்பதால், மற்றவர்களை நீங்கள் எவ்வளவாய் ஊக்குவிக்க முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.# ஒருவரையொருவர் நேசிக்கவும், நற்கிரியைகளைச் செய்யவும் மற்றவர்களைத் தூண்டுவதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகளைப் பாருங்கள்.# இதைச் செய்வதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள உலகம் சிறப்பாய் மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்கள் எனக்கு ஊக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதை விட, என்னால் முடிந்தவரை மிகச் சிறப்பாய் மற்றவர்களை ஊக்குவிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்