வியாழன், 7 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8 அன்பு தேவ பிள்ளையே, * தேவனுடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறீர்கள்?* அது, வேண்டுகோள்கள் மற்றும் மனுக்களால் நிரப்பப்பட்ட உரையாடலா? அல்லது நீங்கள் வெளிப்படையாய் அவருடன் பேசவும், கேட்கவும் கூடிய இயல்பான இருவழி உரையாடலா? * நீங்கள் அவருடன் உரிமையுடனும், எதிர்பார்ப்புடனும் உறவாட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.* நீங்கள் அவருடன் உங்கள் காரியங்களைப் பற்றிப் பேச வேண்டும். உங்களுக்குத் தேவையானதை உரிமையாய்க் கேட்க வேண்டும். அவருடைய சித்தத்தின்படிஅவர் கொடுப்பார் என்று நம்ப வேண்டும்.* தேவனின் பிள்ளையாய், நீங்கள் அவருடைய சொத்துக்குச் சரியான சுதந்தரவாளியாய் இருப்பதால், நீங்கள் பேசுவதை அவர் கேட்க விரும்புகிறார். * கெஞ்சும் மனநிலையுடன் தேவனை அணுகுவதற்குப் பதிலாக, உங்கள் பரலோகத் தகப்பனிடம் தைரியமாய்க் கேளுங்கள்.* கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.* தேவன் உங்களை நேசித்து, உங்கள் தேவைகள், ஆசைகள் மற்றும் கஷ்டங்களைப் பற்றிக் கேட்க விரும்புகிறார்.* உங்களுக்கு வழிகாட்டவும் ஆறுதலளிக்கவும் விரும்புகிற அவர், எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார்.* எனவே, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர் உங்களுக்கு உதவத் தயாராய் இருக்கிறார் என்பதையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து, அவரிடம் வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடுள்ள எனது உறவில் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உம்முடன் உரிமையாய் உறவாட எனக்கு உதவியருளும். ஆமென்.
தேவனுடைய பிள்ளையாய் அவரிடம் உரிமையாய்க் கேளுங்கள்.
“வியாழன், 7 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன். சங்கீதம் 2:8 அன்பு தேவ பிள்ளையே, * தேவனுடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்கிறீர்கள்?* அது, வேண்டுகோள்கள் மற்றும் மனுக்களால் நிரப்பப்பட்ட உரையாடலா? அல்லது நீங்கள் வெளிப்படையாய் அவருடன் பேசவும், கேட்கவும் கூடிய இயல்பான இருவழி உரையாடலா? * நீங்கள் அவருடன் உரிமையுடனும், எதிர்பார்ப்புடனும் உறவாட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.* நீங்கள் அவருடன் உங்கள் காரியங்களைப் பற்றிப் பேச வேண்டும். உங்களுக்குத் தேவையானதை உரிமையாய்க் கேட்க வேண்டும். அவருடைய சித்தத்தின்படிஅவர் கொடுப்பார் என்று நம்ப வேண்டும்.* தேவனின் பிள்ளையாய், நீங்கள் அவருடைய சொத்துக்குச் சரியான சுதந்தரவாளியாய் இருப்பதால், நீங்கள் பேசுவதை அவர் கேட்க விரும்புகிறார். * கெஞ்சும் மனநிலையுடன் தேவனை அணுகுவதற்குப் பதிலாக, உங்கள் பரலோகத் தகப்பனிடம் தைரியமாய்க் கேளுங்கள்.* கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.* தேவன் உங்களை நேசித்து, உங்கள் தேவைகள், ஆசைகள் மற்றும் கஷ்டங்களைப் பற்றிக் கேட்க விரும்புகிறார்.* உங்களுக்கு வழிகாட்டவும் ஆறுதலளிக்கவும் விரும்புகிற அவர், எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார்.* எனவே, உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர் உங்களுக்கு உதவத் தயாராய் இருக்கிறார் என்பதையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து, அவரிடம் வெளிப்படையாகவும், உண்மையாகவும் பேசுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடுள்ள எனது உறவில் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உம்முடன் உரிமையாய் உறவாட எனக்கு உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

