← செய்திகளுக்குத் திரும்பு
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே...

“ரோமர் 12:12. இங்கு மூன்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்: எல்லாமே நன்மைக்காகச் செயல்படும் என்பது கடவுளின் பிள்ளைகளுக்குரிய நம்பிக்கை. வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். 2. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்: கர்த்தர் தம் பிள்ளைகளின் இயல்புத் தன்மையையும், குணங்களையும் சுத்திகரிக்கவும், கூர்மைப்படுத்தவும் அடிக்கடி கஷ்டங்களை அனுமதிக்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் நடக்கும்போது பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். 3. ஜெபத்தில் உண்மையாக இருங்கள்: ஜெபம் என்பது கர்த்தருடன் தொடர்புகொள்வது. அவரிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி அவருக்கு உண்மையாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நம்பிக்கையில் சந்தோஷமாகவும், உபத்திரவத்தில் பொறுமையாகவும், ஜெபத்திலே உறுதியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.ரோமர் 12:12. இங்கு மூன்று கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்: எல்லாமே நன்மைக்காகச் செயல்படும் என்பது கடவுளின் பிள்ளைகளுக்குரிய நம்பிக்கை. வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். 2. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்: கர்த்தர் தம் பிள்ளைகளின் இயல்புத் தன்மையையும், குணங்களையும் சுத்திகரிக்கவும், கூர்மைப்படுத்தவும் அடிக்கடி கஷ்டங்களை அனுமதிக்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் நடக்கும்போது பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். 3. ஜெபத்தில் உண்மையாக இருங்கள்: ஜெபம் என்பது கர்த்தருடன் தொடர்புகொள்வது. அவரிடம் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி அவருக்கு உண்மையாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நம்பிக்கையில் சந்தோஷமாகவும், உபத்திரவத்தில் பொறுமையாகவும், ஜெபத்திலே உறுதியாகவும் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.