வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார். உபாகமம் 4:31 நீங்கள் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?அன்றாட வேலைகள், குடும்பக் கடமைகள், வேலை மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் போன்றவற்றால் நீங்கள் மன அழுத்தத்தோடும், மன பாரத்தோடும் காணப்படுகிறீர்களோ? கவலைகள் ஒரு நபரின் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும் என்பதை அறிவது மிகவும் அவசியம். கவலைப்படுவது உங்கள் பிரச்சினைகளை தீர்க்குமா என்பதை சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள். மன அழுத்தம், பதட்டம் போன்றவை பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாயிருக்கின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உங்கள் கவலைகளை உள்வாங்குவதற்குப் பதிலாக, அவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அவற்றைக் கர்த்தர் முன் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் கர்த்தரின் திட்டத்தில் ஒரு நோக்கம் உள்ளது என்பதை உணருங்கள். அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார், உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் அல்லது தீங்கு விளைவிக்க மாட்டார். உங்கள் கவலைகள் மற்றும் வேதனைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுதலைப் பெறுங்கள். உங்கள் பிரச்சினைகளை அவரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவற்றை சரிப்படுத்த கர்த்தரை அனுமதியுங்கள். அவர் தனது சரியான நேரத்தில் ஒவ்வொரு சூழ்நிலையையும் அழகாக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்த மனதோடுக் காணப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்புவதற்கும், என் கவலைகள் அனைத்தையும் உம்மீது வைப்பதற்கும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்களை கைவிடவுமாட்டார், அழிக்கவுமாட்டார்.
“வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார். உபாகமம் 4:31 நீங்கள் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ?அன்றாட வேலைகள், குடும்பக் கடமைகள், வேலை மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் போன்றவற்றால் நீங்கள் மன அழுத்தத்தோடும், மன பாரத்தோடும் காணப்படுகிறீர்களோ? கவலைகள் ஒரு நபரின் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும் என்பதை அறிவது மிகவும் அவசியம். கவலைப்படுவது உங்கள் பிரச்சினைகளை தீர்க்குமா என்பதை சிறிது நேரம் சிந்தித்துப் பாருங்கள். மன அழுத்தம், பதட்டம் போன்றவை பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாயிருக்கின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. உங்கள் கவலைகளை உள்வாங்குவதற்குப் பதிலாக, அவற்றை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அவற்றைக் கர்த்தர் முன் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் கர்த்தரின் திட்டத்தில் ஒரு நோக்கம் உள்ளது என்பதை உணருங்கள். அவர் உங்களை உண்மையாக நேசிக்கிறார், உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் அல்லது தீங்கு விளைவிக்க மாட்டார். உங்கள் கவலைகள் மற்றும் வேதனைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுதலைப் பெறுங்கள். உங்கள் பிரச்சினைகளை அவரிடம் ஒப்படைப்பதன் மூலம் அவற்றை சரிப்படுத்த கர்த்தரை அனுமதியுங்கள். அவர் தனது சரியான நேரத்தில் ஒவ்வொரு சூழ்நிலையையும் அழகாக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்த மனதோடுக் காணப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்புவதற்கும், என் கவலைகள் அனைத்தையும் உம்மீது வைப்பதற்கும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

