← செய்திகளுக்குத் திரும்பு
நற்குணத்தோடு இருப்பது முத்துக்களைப்பார்க்கிலும் விலைமதிப்பற்றது.
படத்தைப் பதிவிறக்கு

நற்குணத்தோடு இருப்பது முத்துக்களைப்பார்க்கிலும் விலைமதிப்பற்றது.

“குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31:10 நற்குணமிக்க என்பது உயர்ந்த நோக்கம் கொண்டிருத்தல் என்று அர்த்தமாகும். மேலும் இதை, தகுதி, மதிப்பு மற்றும் சிறப்பாகச் செயல்படுவது என்றும் பொருள் கொள்ளலாம். நல்லொழுக்கமுள்ள மக்கள் பெரும்பாலும் நல்லவர்கள், கனிவானவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் நீதியுள்ளவர்கள் ஆவர். இதற்கு இயேசுவே சரியான உதாரணம். அவர் கனிவானவர், இரக்கமுள்ளவர், நேர்மையானவர், நீதியுள்ளவர். இயேசு எப்பொழுதும் மற்றவர்களை தமக்கு முன்பாக வைப்பது மட்டுமல்லாமல், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற சிலுவையில் மரிக்கத் தயாராக இருந்தார். உங்கள் வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்து, நற்குணத்தில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்க வேண்டும். மேலும் நற்குணமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சில குறிப்புகள் இங்கே: * பிறரிடம் தயவோடும், இரக்கத்தோடும் இருங்கள்.* மற்றவர்களுடன் பழகும் போது நேர்மையாகவும் உண்மையாகவும் பழகுங்கள்.* மற்றவர்களை மன்னித்து, தேவைப்படும்போது மன்னிப்பு கேட்கவும் தயாராக இருங்கள்.* உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதிலிருந்து வளருங்கள். நற்குணமிக்க வாழ்க்கை வாழ்வது ஒரு பயணம், இலக்கு அல்ல. இதற்கு நேரம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவை. என்றாலும், இது மிகவும் மதிப்புமிக்க பயணம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நான் நற்குணமிக்க நபராக இருக்க உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. நீதிமொழிகள் 31:10 நற்குணமிக்க என்பது உயர்ந்த நோக்கம் கொண்டிருத்தல் என்று அர்த்தமாகும். மேலும் இதை, தகுதி, மதிப்பு மற்றும் சிறப்பாகச் செயல்படுவது என்றும் பொருள் கொள்ளலாம். நல்லொழுக்கமுள்ள மக்கள் பெரும்பாலும் நல்லவர்கள், கனிவானவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் நீதியுள்ளவர்கள் ஆவர். இதற்கு இயேசுவே சரியான உதாரணம். அவர் கனிவானவர், இரக்கமுள்ளவர், நேர்மையானவர், நீதியுள்ளவர். இயேசு எப்பொழுதும் மற்றவர்களை தமக்கு முன்பாக வைப்பது மட்டுமல்லாமல், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற சிலுவையில் மரிக்கத் தயாராக இருந்தார். உங்கள் வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்து, நற்குணத்தில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்க வேண்டும். மேலும் நற்குணமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சில குறிப்புகள் இங்கே: * பிறரிடம் தயவோடும், இரக்கத்தோடும் இருங்கள்.* மற்றவர்களுடன் பழகும் போது நேர்மையாகவும் உண்மையாகவும் பழகுங்கள்.* மற்றவர்களை மன்னித்து, தேவைப்படும்போது மன்னிப்பு கேட்கவும் தயாராக இருங்கள்.* உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதிலிருந்து வளருங்கள். நற்குணமிக்க வாழ்க்கை வாழ்வது ஒரு பயணம், இலக்கு அல்ல. இதற்கு நேரம், முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவை. என்றாலும், இது மிகவும் மதிப்புமிக்க பயணம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து நான் நற்குணமிக்க நபராக இருக்க உதவிச் செய்யும். ஆமென்.