← செய்திகளுக்குத் திரும்பு
இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

“1 யோவான் 2:8. * உங்கள் கடந்த காலத்தின் இருண்ட பக்கத்தால் நீங்கள் இன்னும் வேதனையுற்று, மன வருத்தத்துடன் போராடிக் கொண்டிருப்பீர்களானால், இயேசுவில் உங்களுக்குத் தீர்விருக்கிறது என்று நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.* உங்கள் கடந்த கால இருண்ட சூழ்நிலையை மேற்கொண்டு செழிப்பாய் மாற முடியும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் இயேசு கொடுக்கிறார்.* உங்கள் கடந்த காலம் மிகவும் மோசமான பிரச்சனைகளையும் தோல்விகளையும் உடையதாயிருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் பாதையைக் கண்டறிய இயேசு உங்களுக்கு உதவிச் செய்வார். * உங்கள் கடந்த காலத் தவறுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்காமல், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துங்கள்.* உங்கள் கடந்தகாலத்தின் இருண்ட செயல்களைத் தூக்கி எறிந்துவிட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.* நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்வின் ஒளியாய் மாற்றும்போது, உங்கள் வாழ்க்கையில் பரிபூரண ஆசீர்வாதங்களைக் காணத் தொடங்குவீர்கள். * கடந்த காலத் தவறுகளை முறியடித்து, நீங்கள் விரும்பும் நபராய் மாறுவதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது.* என்றாலும், விசுவாசம், விடாமுயற்சி மற்றும் இயேசுவின் உதவியால், நீங்கள் எந்தத் தடைகளையும் கடந்து உங்கள் இலக்குகளை அடைய முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ்வதில் கவனம் செலுத்துவதற்கான வழிகாட்டுதலுக்காகவும் வல்லமைக்காகவும் நான் உம்மிடம் வருகிறேன். உம்முடைய ஒளி என்மீது பிரகாசித்து, பிரகாசமான எதிர்காலத்தை எனக்குத் தந்தருளட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிறு, 14 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. 1 யோவான் 2:8. * உங்கள் கடந்த காலத்தின் இருண்ட பக்கத்தால் நீங்கள் இன்னும் வேதனையுற்று, மன வருத்தத்துடன் போராடிக் கொண்டிருப்பீர்களானால், இயேசுவில் உங்களுக்குத் தீர்விருக்கிறது என்று நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.* உங்கள் கடந்த கால இருண்ட சூழ்நிலையை மேற்கொண்டு செழிப்பாய் மாற முடியும் என்ற நம்பிக்கையையும், உறுதியையும் இயேசு கொடுக்கிறார்.* உங்கள் கடந்த காலம் மிகவும் மோசமான பிரச்சனைகளையும் தோல்விகளையும் உடையதாயிருந்தாலும், முன்னோக்கிச் செல்லும் பாதையைக் கண்டறிய இயேசு உங்களுக்கு உதவிச் செய்வார். * உங்கள் கடந்த காலத் தவறுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருக்காமல், நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கவனம் செலுத்துங்கள்.* உங்கள் கடந்தகாலத்தின் இருண்ட செயல்களைத் தூக்கி எறிந்துவிட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.* நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்வின் ஒளியாய் மாற்றும்போது, உங்கள் வாழ்க்கையில் பரிபூரண ஆசீர்வாதங்களைக் காணத் தொடங்குவீர்கள். * கடந்த காலத் தவறுகளை முறியடித்து, நீங்கள் விரும்பும் நபராய் மாறுவதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது.* என்றாலும், விசுவாசம், விடாமுயற்சி மற்றும் இயேசுவின் உதவியால், நீங்கள் எந்தத் தடைகளையும் கடந்து உங்கள் இலக்குகளை அடைய முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை வாழ்வதில் கவனம் செலுத்துவதற்கான வழிகாட்டுதலுக்காகவும் வல்லமைக்காகவும் நான் உம்மிடம் வருகிறேன். உம்முடைய ஒளி என்மீது பிரகாசித்து, பிரகாசமான எதிர்காலத்தை எனக்குத் தந்தருளட்டும். ஆமென்.